நிறம் மாறும் ஓநாய்கள் (ஒரு பக்க கதை)

"எக்ஸ்க்யுஸ் மீ சார். உள்ள வரலாமா?"
"வாங்க வாங்க, உட்காருங்க"
"சொல்லுங்க சார். ஏதோ அவசரமா வர சொன்னதா ஆபீஸ் பாய் சொன்னான்"
"எல்லாம் நல்ல விஷயம் தான். நீங்க ஏதோ பணம் வேண்டும் னு கேட்டீங்க இல்லியா?"
"எஸ் சார், சீக்கிரம் கிடச்சுடுமா சார்? ரொம்ப அவசரம் சார். ஏற்பாடு பண்ணி தந்தீங்கனா நல்லா இருக்கும்"
"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. ஏற்பாடு செஞ்சுடலாம். அடுத்த வாரம் நீங்க ப்ரீயா?"
"எவ்ளோ நேரம் வேலை செய்றதுக்கும் நான் ரெடி சார்"
"வேலை அப்புறமா பார்த்துக்கலாம். அடுத்த வாரம் என் மனைவி ஊருக்கு போறா. நீங்க இரவு வீட்டுக்கு வந்தா, மறுநாள் நானே உங்களை வீட்டில் விட்டுடுறேன். அப்புறம்..."
"நிறுத்துங்க சார். உங்கள் மேல் எவ்ளோ மதிப்பு வச்சு இருந்தேன். சை! இவ்ளோ மோசமானவரா நீங்க? நான் மட்டு நம்ம மேல் அதிகாரி..."
"போதும் நிறுத்து. அவருக்கே உன் மேல ஒரு கண் இருக்குனு எனக்கு தெரியும். பெரிய பத்தினி மாதிரி பேசுற? ஒரு நாள் தங்கினா கொறஞ்சா போய்டுவா? பணம் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி வேண்டும்னா சொல்லு. இந்த..."
அவன் பேசி முடிக்கும் முன் அவன் கன்னம் பழுத்தது.
"உங்க மனைவி மகள் அப்படி பட்டவர்களா இருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை. என் கிட்ட பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னோட மிகப்பெரிய சொத்தே என் மானம் தான். அதுக்கு உங்களை மாதிரி ஆட்களால் விலை பேச முடியாது. இத்தனை நாள் இங்க வேலை பார்த்ததுக்காக வெட்கப்படுறேன். இப்போவே ராஜினாமா செய்யுறேன். வரேன். இல்லை...போறேன்!"
என்று கூறியபடி கம்பீரமாக வெளியேறினாள்.

கட் கட்...
மொத்த பட யூனிட்டும் அவளின் நடிப்பை பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தது.

அந்த படத்தின் இயக்குனர் அவளிடம் சென்றார்.
"அருமையா நடிச்சு குடுத்தீங்க. இந்த ஒரு சீன்னுக்காகவே உங்களுக்கு அவார்ட் நிச்சயம்"
"எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார். நீங்க இப்படி ஒரு சீன் அமைத்து குடுத்தது என் பாக்யம்"
"சரி, என் அடுத்த படத்துக்கும் உங்களை தான் போடுவதாக இருக்கேன்"
"ரொம்ப நன்றி சார். கண்டிப்பா நடிச்சு தரேன்"
"கதை டிஸ்கஷ்ஷன் இன்னிக்கே வச்சுக்கலாம். என்னோட கெஸ்ட் ஹவுஸ் தெரியும் இல்லியா? இரவு அங்க வந்துடுங்க"
தான் நடித்த கதையின் நாயகி போல் இருக்க முடியவில்லையே என்று மனம் நொந்து தலை ஆட்டினாள்.

Comments

Popular posts from this blog

The Buzz

Execution

Hit and Run