திக் திக் நிமிடங்கள் - 3

"ஐயோ, என்ன இது அகில்? அந்த சடலம் எப்படி காணமல் போச்சு?"

"தெரியவில்லையே! நம் வீட்டில் இதை போட்டவர்கள், நம்மை பின் தொடர்ந்து வந்து இருப்பார்கள் என நினைக்குறேன். அனால், நம் மேல் பழி விழ வேண்டும் என நினைத்தவர்கள் சடலத்தை நாம் புதைக்கும் முன் ஏன் எடுத்தார்கள் என்று தான் புரியவில்லை"

"அப்போ இன்னும் அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் போல. நாம் சீக்கிரம் கிளம்பி விடலாம் டா"

"பொறு, நீ இங்கே கார்-க்குள் பூட்டிக்கொண்டு இரு. நான் யாரவது தென்படுகிறார்களா என்று பார்த்து விட்டு வரேன்"

"இல்லை ப்ளீஸ், எனக்கு இங்க இருந்து கிளம்பினால் போதும். அவர்கள் வேற ஏதும் ஆயுதம் வைத்து இருந்தால் நீ என்ன செய்ய முடியும்?"

"ஹ்ம்ம், நீ சொல்வதும் சரி தான், வா கிளம்பலாம். எந்த வம்பிலும் மாட்டாமல் இருந்தால் சரி" என கூறியபடி கார்-ஐ ஸ்டார்ட் செய்தான்.

ஆனால் இனிமேல் தான் அவர்களுக்கு மேலும் பல அதிர்ச்சி காத்திருப்பது தெரிந்தால்??

மறுநாள் பொழுது எப்போதும் போல் இனிமையாக விடிந்தது. இருவரும் முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியையே பேசிக்கொண்டு இருந்தவர்கள், ரொம்ப நேரம் கழித்து தான் தூங்க போனார்கள். இனிமேல் அதை பத்தி பேச கூடாது என தங்களுக்குள் முடிவும் எடுத்துக்கொண்டார்கள்.
அவர்கள் அப்படி முடிவு செய்தால் போதுமா? பின் விதி என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை அல்லவா?

அகில் ஆபீஸ்-இல் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். அப்போது அவன் அலைபேசி "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..." என பாடியது.

"ஹலோ, அகிலன் ஸ்பீகிங்"

"தம்பி, நான் உங்க பக்கத்து வீட்டில் இருந்து பேசுறேன். உங்க மனைவி திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள். கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா?"

"உடனே வர்றேன்"

அகில் விழுந்து அடித்து கொண்டு ஓடினான். அவன் எப்படி காரிடம் வந்தான், ஸ்டார்ட் செய்து எப்படி ஓட்டினான், எதுவுமே அவனுக்கு தெரியாது. வீட்டுக்கு சென்ற போது, வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் சென்று கதவை தட்டினான். அங்கே வேலை செய்பவன் கதவை திறந்தான்.

"யாரு வேண்டும் உங்களுக்கு?"

"கொஞ்சம் வீட்டுல இருபவர்களை கூப்பிடுங்கள், ரொம்ப அவசரம்"

"ஐயாவும் அம்மாவும் ஊருக்கு போயிருக்காங்க. நாளை மறுநாள் தான் வருவாங்க."

"என்னது? ஊருக்கு போயிருகாங்களா ? யார் கிட்ட கதை விடற? இப்போது தான் எனக்கு கால் பண்ணாங்க. வழியை விடு, நான் போய் பார்த்துக்குறேன்"

அப்போது யாரோ தன்னை அழைப்பது கேட்டு திரும்பினான். எதிர் வீட்டு மாமி வந்து கொண்டு இருந்தார்.

"அகில், அவன் சொல்வது உண்மை தான். நீ எப்போதுமே ரொம்ப அமைதியா தானே இருப்ப. இப்போ ஏன் இப்படி காட்டு கத்தல் போடுற?

"..."

"சரி சரி, உனக்கு ஆபீஸ்-இல் என்ன டென்ஷனோ. மதி அரை மணி நேரத்துக்கு முன்னால தான் அவசரமா எங்கேயோ கிளம்பி போனா. உன் கிட்ட வேற சாவி இருக்காப்பா?"

"மதி வெளியே போனாளா? உங்க கிட்ட எதுவும் சொன்னாளா?"

"இல்லியே...உங்களுக்குள்ளே ஏதும் சண்டையா? அவள் அழுதுட்டே போன மாதிரி இருந்தது."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமி. சரி, என் கிட்ட வேற சாவி இருக்கு. நான் பார்த்துக்குறேன். தகவலுக்கு நன்றி"

அகில் தன் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றான். அவனுக்குள் பல கேள்விகள் அவனை துளைத்து எடுத்து கொண்டு இருந்தது.

யார் நம்மை வீட்டுக்கு வரவழைத்தார்கள்?
மதி ஏன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை பூட்டி விட்டு சென்றாள்?
ஏன் அழுதாள்?
எங்கே சென்று இருப்பாள்?

மதி எப்படியும் தனக்கு கால் செய்வாள் என முடிவு செய்து அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து தான் மதி திரும்பினாள்.

"மதிம்மா, என்ன டா ஆச்சு? இவ்ளோ நேரம் எங்கே போனாய்? எனக்கு ஒரு கால் கூட செய்யலை?"

"நாம் மோசம் போய்ட்டோம் அகில். நம் வாழ்வை முடித்துக் கொள்வதை தவிர வேற வழி இல்லை" என கூறி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"மதி ப்ளீஸ், அழுவதை நிறுத்து. என்ன நடந்தது என்று முதல்லில் சொல்லு"

"நீ ஆபீஸ் கிளம்பி கொஞ்சம் நேரத்தில் எனக்கு கால் வந்தது. நீ விபத்தில் மாட்டிக் கொண்டதாகவும் ரொம்ப சீரியஸ்-ஆக இருப்பதாகவும் சொன்னார்கள். நான் பயந்து போயி அவர்கள் சொன்ன ஹோச்பிடல்-க்கு சென்றேன். அங்கே உன் பெயரில் யாரும் அட்மிட் ஆகலை னு சொன்னாங்க. நான் குழப்பத்தோடு கிளம்ப எத்தனிக்கும் போது, ஒரு சிறுவன் என்னிடம் வந்து ஒருவர் குடுக்க சொன்னதாக இந்த கவர்-ஐ குடுத்தான்."

"நீ கவர்-இல் என்ன இருக்கு னு பார்த்தியா?"

"ஹ்ம்ம், பார்த்தேன். நீயும் பார்" என கூறிவிட்டு அதை அவனிடம் குடுத்தாள். அகில் வேகமாக துடிக்கும் இதயத்தோடு கவர்-ஐ பிரித்தான்.
அதில் மூன்று புகை படங்கள் இருந்தது.

அகில் அந்த சடலத்தை கார் டிக்கி-இல் ஏற்றும் காட்சி.
அகில் குழி தோண்டும் காட்சி.
அகிலும் மதியும் அந்த குழி பக்கத்தில் நிற்கும் காட்சி.
கூடவே ஒரு சின்ன காகிதம். அதில் ஒரே வரி...

"போலீஸ் கூடிய சீக்கிரம் வரும்"

அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு அகில் வெளியே சென்றான். வந்தது ஒரு போலீஸ் அதிகாரி...

Comments

Popular posts from this blog

The Buzz

Hit and Run

Guilty or not?