திக் திக் நிமிடங்கள் - 1

இன்றோடு அகில் மதிவதனி கல்யாணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. அவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. ஆகையால் திருமணத்துக்கு முன்னர் பேசி பழக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு சேர்த்து வைத்து திருமணத்துக்கு பின்னர் இருவரும் பத்து நாள் சுவிட்சர்லாந்த்-இல் திகட்ட திகட்ட தேன் நிலவு கொண்டாடினார்கள். அதன் பின்னரும் இந்த ஒரு வருடமும் நகமும் சதையும் போல தாம்பத்தியம் நடத்தினார்கள்.

மதி அவளின் அன்புக்கணவனிடம் கொஞ்சிக்கொண்டு இருக்கும் வேளையில் அவர்களை பற்றி ஒரு சின்ன அறிமுகம். அகில் அந்த காலத்து கமல் ஹாசனை நினைவுக்கூறும் தோற்றம் உடையவன். நல்ல உயரம். ஒரு மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனி-இல் ப்ராஜெக்ட் மேனேஜர். ஒரு பெண் தனக்கு வர வேண்டிய கணவனிடம் என்ன என்ன தகுதிகள் எதிர்பார்பாளோ, அது அனைத்தும் அவனுக்கு இருந்தது. மதி அவன் போட்டோ பார்த்து மயங்கியதில் ஆச்சர்யமே இல்லை. மதி மாநிறம். பெண்களில் அவள் நல்ல உயரம். உயரத்துக்கு ஏற்ற எடை. தெருவில் நடந்தால் ஒரு முறையானும் எவரும் அவளை திரும்பி பார்க்காமல் இருக்க மாட்டார். B.A இங்கிலீஷ் முடித்து இருக்கிறாள்.

"அகில், இன்னிக்கு நமக்கு 1st அன்னிவேர்சரி. இன்னிக்கும் லேட்-அ வராத ப்ளீஸ் டா"

"மதி டியர், இன்னிக்கு உனக்கு எவ்ளோ பெரிய ஷாக் தரேன்னு பொறுத்து இருந்து பாரு" என கண்ணடித்தபடியே வெளியேறினான்.

அன்று இரவு அவர்கள் இருவருக்கும் விதி அதை விட பெரிய அதிர்ச்சி வைத்து இருந்தது தெரிந்து இருந்தால்??

அகில் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து மதியை இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காட வைத்து அவளுக்கு பிடித்த ஹீரோ-வின் படத்துக்கு கூட்டிச்சென்றான். பின்னர் டின்னெர் அவன் ஆசை மனைவிக்கு பிடித்த ஹோட்டல்-இல் சாப்பிட்டு வீடு திரும்பும்போது நேரம் 10:30 ஆகி இருந்தது.

அகில் கார்-ஐ பார்க் பண்ணி கொண்டு இருந்தான். மதி வீட்டை திறக்க சென்றாள். திடீரென அவளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் பாய்ந்து சென்றான்.

"மதிம்மா, என்னடா ஆச்சு?"

"அ...அகில், கிளம்பும் போது நாம் வீட்டை பூட்டிட்டு தானே கிளம்பினோம். இப்போ திறந்துருக்கு பாரு"

"ஆ...கடவுளே!! நீ என்னை கெட்டியாக பிடிச்சுக்கோ. உள்ளே யாராச்சும் இருக்காங்களா னு பார்க்கலாம், வா"

"முதல்ல லைட் ஒன் பண்ணு டா"

அகில் சுவிட்ச் ஒன் செய்தான். ஆனால் லைட் எரியவில்லை. "கரண்ட் இல்லை போல இருக்கு டா. நீ மெதுவா என் பின்னாலையே வா."

அகில் மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். ஹால் முழுதும் தேடினார்கள் எதுவும் தட்டுப்படவில்லை. பின்னர் ஒவ்வொரு அறையாக சென்றார்கள். எங்கும் எதுவும் வித்தியாசமாக அவர்கள் கண்ணுக்கு தென்படவில்லை. சோர்ந்து அவர்களின் அறையின் கட்டிலில் அமர்ந்தார்கள். சரியாக கரண்ட்-உம் வந்தது.

"மதி, நல்ல வேளை, நம் பணத்தையும் நகையும் பேங்க் லாக்கர்-இல் வைத்து இருக்கிறோம். திருடன் வந்து எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு சென்று இருப்பான்."

"என்ன டா இது? நம்ம வெட்டிங் அன்னிவேர்சரி அன்னிக்கு போயி இப்படி நடக்குமா?"

"நீ எதுவும் மனசை போட்டு குழப்பிக்காத மா. தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு நிம்மதியா இரு."

"சரி, ரொம்ப அசதியா இருக்கு. நான் குளிச்சுட்டு வரேன்"

"ஹ்ம்ம். சீக்கிரமா வா. அதுக்குள்ள நான் நம்ம நைட் விஷயத்துக்கு ரெடி பண்றேன்" என அவன் குறும்போடு கூற அவள் சிணுங்கி கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள். அதிர்ந்தாள்! அவளுக்கு பேச்சு கூட எழவில்லை. ஸ்தம்பித்து அப்படியே நின்றாள். பின்னர் "ஆஆ............." என கூச்சலிட்டாள்.

அகில் விரைந்து ஓடினான். வீடு முழுக்க தேடிய போது குளியறைக்குள் பார்க்க வேண்டும் என இரண்டு பேருக்கும் தோன்றவில்லை.

அங்கே தலை முழுக்க இரத்த வெள்ளத்தில் ஒரு ஆண் சடலம் இருந்தது.

Comments

Popular posts from this blog

The Buzz

Execution

Hit and Run