திக் திக் நிமிடங்கள் - 5 (Final)
"நம் பிளான் வெற்றி!!"
மதி அவனிடம் கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இரு விழிகள் அவர்களை உற்று பார்த்துக்கொண்டு இருந்தது.
"என்ன மதிக்குட்டி? 20 லட்சம் ரெடியா?"
"கோபால்! இன்னும் நாம் பாதி கிணறு தான் தாண்டி இருக்கோம். எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு"
"உன் கணவன் ஒரு முட்டாள். நாம் மீதி பிளான்-உம் சரியா முடிப்போம். இப்போ நான் சொல்வதை கவனமா கேள்..."
------------------------------
மணி இரவு 9:00. மதி இன்னும் வீடு திரும்பவில்லை. அவனால் மதிக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமோ என்று அகில் பயப்பட தொடங்கினான். அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. மதி வந்துவிட்டாள் என்று ஓடோடி சென்று பார்த்தான். அங்கே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்.
இந்நேரத்தில் இவன் எதுக்கு இங்கு வந்தான்? மதி வரும் முன் இவனை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என எண்ணிய படி
"ஹலோ கார்த்திக். என்ன திடீரென்று இந்த பக்கம்?"
"சொல்றேன். முதலில் உள்ளே சென்று பேசலாம் அகில்"
ஹால்-இல் உள்ள சோபா-இல் அமர்ந்து வாசலில் ஒரு பார்வை வைத்துக்கொண்டே அகில் பேச ஆரம்பித்தான்.
"என்னடா? ஏதும் முக்கியமான விஷயமா?"
"ஏன்டா அகில். நீ இவ்ளோ படிச்சுருக்க. ஒரு ப்ளாக்மெயில் கால் வந்த உடனே போலீசிடம் செல்ல வேண்டும் என்று உனக்கு தெரியாதா? நான் உன் நெருங்கிய நண்பன் தானே என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லலாமில்லியா?"
"கார்த்திக்! என்னடா சொல்ற? உனக்கு எப்படி தெரியும்? என் மேல தப்பே இல்லை டா. எல்லாம்..."
"பொறு, நான் சொல்ல வந்ததை முடிச்சுடறேன். அன்னிக்கு உன் வீட்டுக்கு வந்தேன் இல்லியா? உங்க ரெண்டு பேரும் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்கொண்டது எனக்கு நன்றாக தெரிந்தது. நீங்க சொல்றீங்களா னு பார்த்தேன். ஆனால் இருவரும் வாயே திறக்கவில்லை. அப்போவே என் மனசுக்குள் ஒரு சின்ன நெருடல். உன்னை பார்த்தால் எதனாலோ பயந்த மாதிரி தெரிந்தது. ஆனால் என் போலீஸ் பார்வைக்கு உன் மனைவி மேல் ஒரு சந்தேகமும் கூடவே வந்தது. இப்போ நான் சொல்வதை கேட்க நெஞ்சை திடப்படுத்திக்கொள்" என்று கூறிய படி தன் பாக்கெட்-இல் இருந்து ஒரு கவர்-ஐ எடுத்து அகிலிடம் குடுத்தான்.
அந்த கவர்-ஐ அகில் பிரித்தான். அவன் நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது....
------------------------------
மதியும் கோபாலும் அவளோட கார்-இல் சென்று கொண்டு இருந்தார்கள்.
"மதிக்குட்டி! நீ பேசாமல் சினிமாவில் நடிக்க போகலாம். என்னமா நடிக்குற? போலீஸ்-க்கு கால் பண்ணலாம்னு நீயே யோசனைலாம் சொல்ற?"
"எனக்கு அகிலனை பற்றி நல்லா தெரியும் கோபால். நான் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக தான் முடிவு எடுப்பான். ஆமா நீ மட்டும் என்னவாம்? ஒரு பிணம் மாதிரியே தத்ரூபமாக நடிச்சியே."
"சரி சரி, இனிமேல் இந்த பழைய கதை எல்லாம் நாம் யோசிக்கவே கூடாது. நாம் ஒரு புது வாழ்க்கை தொடங்குவோம். சந்தோஷமாக மீதி வாழ்வை கழிப்போம்...."
பாவம்! நன்மை நன்மையில் முடியும். தீமை தீமையில் தான் முடியும் என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை!!
------------------------------
அந்த கவர்-இல் அவனோட மதியும் அந்த சடலமாக கிடந்தவனும் கை கோர்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள். கார்த்திக் பேச ஆரம்பித்தான்.
"இவன் பெயர் கோபால். நீ மதியை கல்யாணம் செய்யும் முன்னாலயே அவர்களுக்குள் தொடர்பு இருந்துருக்கு. உன் பணத்துக்காக தான் மதி உன்னை கல்யாணம் செய்து இருக்கிறாள். ஒரு வருடம் இருவரும் பொறுமையாக காத்திருக்கிறார்கள். அன்று மதி வீட்டு சாவியை கோபாலிடம் குடுத்து விட்டு உன்னுடன் வெளியே வந்து இருக்கிறாள். கோபால் நீங்கள் வரும் முன் உங்கள் வீட்டில் பிணமாக நடித்திருக்கிறான். நீ வெளியே கார்-இல் அவனை ஏற்றும் போது மதி தான் படம் பிடித்து இருக்கிறாள். நீங்கள் வெளியே புதைக்க செல்லும் போதும் மதி தான் நீ தோண்டுவதை படம் பிடித்து இருக்கிறாள். பின்னர் டிக்கியை திறந்து அவனை வெளியே அனுப்பி விட்டு உன்னிடம் வந்து விட்டாள். அவள் மேல் சந்தேகம் வர கூடாது என்பதற்காக அவன் உங்கள் இருவரையும் ஒரு படம் பிடித்து இருக்கிறான். அதன் பின் நடந்தது தான் உனக்கே தெரியுமே"
"நான் மோசம் போயிட்டேன் கார்த்திக். நான் அவள் மேல் உண்மையான காதல் வைத்து இருந்தேன். என்னை நேராக ஏமாற்றி இருந்தால் கூட பரவில்லை. காதல் நாடகம் ஆடி என் மனதை கொன்று விட்டாள். என் காதலும் என்னிடம் இல்லை. என் பணமும் என்னிடம் இல்லை. இனிமேல் நான் வாழ தகுதியே இல்லை..."
"அமைதியாக இரு அகில். அவள் உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவள். இருவருக்கும் சட்டத்தின் மூலம் சரியான பாடம் கற்று தருவோம். அவர்களின் பிளான் படி, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அவள் கார்-ஐ மரத்தின் மேல் மோத விட்டு ஒரு அனாதை பிணத்தை கார்-இன் உள்ளே வைத்து பூட்டி கார்-ஐ கொளுத்தி விடுவது. எரிந்தது மதி தான் என்று நீயும் போலீஸ்-உம் முடிவு செய்வீர்கள். அவர்கள் இன்று இரவு வட இந்தியா சென்று விடுவது"
"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
"நான் உன் மனைவியை ஒரு வாரமாக கண்காணித்து கொண்டு இருந்தேன். இன்று உன் மனைவி வீட்டை விட்டு கிளம்பிய உடன் அவளை பின் தொடர்ந்து சென்று எல்லா உண்மையும் தெரிந்து கொண்டேன். சரி, இப்போ நேரத்தை வீணடிக்காமல் கிளம்பலாம். ரயில்வே ஸ்டேஷன்-இல் தான் இருப்பார்கள். ரயில் 10:00 க்கு கிளம்பும். அதற்குள் அவர்களை பிடிக்க வேண்டும். அவர்களை பிடிக்கும் போது நீயும் கூட இருக்க வேண்டும் என்று தான் உன்னையும் அழைத்து போக வந்தேன்."
நேரம் 9:30. வேகமாக கார்த்திக்-இன் ஜீப்-இல் போனார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களை பிடிக்க முடியுமா??
ஜீப் ரயில்வே ஸ்டேஷன்-ஐ அடையும் போது மணி 9:58. வேகமாக ஓடினார்கள். ஐயோ! அவர்கள் கிளம்பும் முன்னால் பிடிக்க வேண்டுமே. ஆனால் அவர்கள் சரியாக பிளாட்போரத்தில் நுழையும்போது ரயில் கிளம்பியது.
"அவர்களை பிடிக்க முடியவில்லையே கார்த்திக்!"
"பரவாயில்லை! நான் அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து விடுவேன்"
அப்போது அகில்-இன் அலைபேசி அழைத்தது
"ஹலோ!"
"ஹலோ, அகிலன்-ஆ?
"எஸ், சொல்லுங்க. யார் பேசுவது?"
"நான் போலீஸ் டிபார்ட்மென்ட்-இல் இருந்து பேசுறோம். உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி"
ஒரு விரக்தியான புன்னகையுடன் அகிலன் "சொல்லுங்க சார்"
"மன்னிக்கவும். ஒரு வருத்தமான செய்தி. உங்கள் கார் விபத்தில்-இல் சிக்கி கொண்டது. நீங்க உடனே ஸ்பாட்-க்கு வர வேண்டும். "
"சரி சார். நான் வந்து விபரமா பேசுவோம்"
எந்த அதிர்ச்சியும் அடையாமல் பேசுகிறாரே என்று எண்ணியபடி "இன்னொரு விஷயம். உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் இறந்து விட்டார்கள். அவர்களை நீங்கள் தான் அடையாளம் காட்ட வேண்டும்"
"என்...என்ன? இரண்டு பேரா? விபத்து எப்படி நடந்தது என்று சொல்ல முடியுமா?"
"கார் லாரியுடன் மோதியுள்ளது. லாரி மேல் தான் சார் தவறு. லாரியில் யாருக்கும் எந்த அடியும் படவில்லை. அவர்கள் மேல் கம்ப்ளைன்ட் குடுங்கள். அவர்களை கம்பி என்ன வைத்து விடலாம். அப்போது தான் மற்றவர்களுக்கும் பயம் இருக்கும்"
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார்" என்று கூறி விட்டு வைத்தவன் "ஓ....." என அழ தொடங்கினான்.

Comments
Post a Comment