திக் திக் நிமிடங்கள் - 5 (Final)
"நம் பிளான் வெற்றி!!" மதி அவனிடம் கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இரு விழிகள் அவர்களை உற்று பார்த்துக்கொண்டு இருந்தது. "என்ன மதிக்குட்டி? 20 லட்சம் ரெடியா?" "கோபால்! இன்னும் நாம் பாதி கிணறு தான் தாண்டி இருக்கோம். எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு" "உன் கணவன் ஒரு முட்டாள். நாம் மீதி பிளான்-உம் சரியா முடிப்போம். இப்போ நான் சொல்வதை கவனமா கேள்..." ------------------------------ மணி இரவு 9:00. மதி இன்னும் வீடு திரும்பவில்லை. அவனால் மதிக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமோ என்று அகில் பயப்பட தொடங்கினான். அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. மதி வந்துவிட்டாள் என்று ஓடோடி சென்று பார்த்தான். அங்கே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான். இந்நேரத்தில் இவன் எதுக்கு இங்கு வந்தான்? மதி வரும் முன் இவனை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என எண்ணிய படி "ஹலோ கார்த்திக். என்ன திடீரென்று இந்த பக்கம்?" "சொல்றேன். முதலில் உள்ளே சென்று பேசலாம் அகில்" ஹால்-இல் உள்ள சோபா-இல் அமர்ந்து வாசலில் ஒரு பார்வை வைத்துக்கொண்டே அகில் பேச ஆரம்பித்தான். "என்னடா? ஏது...