Posts

திக் திக் நிமிடங்கள் - 5 (Final)

"நம் பிளான் வெற்றி!!" மதி அவனிடம் கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இரு விழிகள் அவர்களை உற்று பார்த்துக்கொண்டு இருந்தது. "என்ன மதிக்குட்டி? 20 லட்சம் ரெடியா?" "கோபால்! இன்னும் நாம் பாதி கிணறு தான் தாண்டி இருக்கோம். எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு" "உன் கணவன் ஒரு முட்டாள். நாம் மீதி பிளான்-உம் சரியா முடிப்போம். இப்போ நான் சொல்வதை கவனமா கேள்..." ------------------------------ மணி இரவு 9:00. மதி இன்னும் வீடு திரும்பவில்லை. அவனால் மதிக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமோ என்று அகில் பயப்பட தொடங்கினான். அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. மதி வந்துவிட்டாள் என்று ஓடோடி சென்று பார்த்தான். அங்கே கார்த்திக் நின்று கொண்டு இருந்தான். இந்நேரத்தில் இவன் எதுக்கு இங்கு வந்தான்? மதி வரும் முன் இவனை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என எண்ணிய படி "ஹலோ கார்த்திக். என்ன திடீரென்று இந்த பக்கம்?" "சொல்றேன். முதலில் உள்ளே சென்று பேசலாம் அகில்" ஹால்-இல் உள்ள சோபா-இல் அமர்ந்து வாசலில் ஒரு பார்வை வைத்துக்கொண்டே அகில் பேச ஆரம்பித்தான். "என்னடா? ஏது...

திக் திக் நிமிடங்கள் - 4

"ஹலோ அகில்! என்னை ஞாபகம் இருக்கா?" "கார்த்திக்! நீ எப்படிடா இங்கே? எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து? வா வா, உள்ளே வந்து உட்காரு. மதி... யார் வந்து இருக்காங்கனு பாரு. என் ஸ்கூல் நண்பன்..." "வணக்கம் கார்த்திக்! ஒரு நிமிஷம், காபி கொண்டு வரேன்" "வேண்டாம் சிஸ்டர். உடனே கிளம்பனும். டேய்! எனக்கு கல்யாணம் டா, நீ கண்டிப்பா வர வேண்டும் சரியா? இந்தா பத்திரிக்கை. நிறைய வேலை இருக்குடா, நான் கிளம்புறேன். வருகிறேன் சிஸ்டர், நீங்களும் அவசியம் வர வேண்டும்" என்று விடை பெற்றான் கார்த்திக். "இப்போ என்ன அகில் செய்யலாம்? இந்த இக்கட்டில் இருந்து மீள வழியே இல்லையா?" அப்போது அவர்கள் வீட்டு தொலைபேசி அலறியது. அகில் நடுக்கத்தோடு எடுத்தான். "ஹ..ஹலோ!" "ஹாய் அகில். போடோஸ் பார்த்தியா? நேர்ல பார்கிறது விட, அதுல இன்னும் ஹன்ட்சம்-அ இருக்க." "உனக்கு என்ன வேண்டும்? யார் நீ? எங்களை ஏன் இப்படி சித்திரவதை செய்யுற?" "நல்ல கேள்வி. நான் யார் என்பது முக்கியம் இல்லை. எனக்கு என்ன வேண்டும் கேட்ட பார்த்தியா? அது புத்திசாலித்தனம். 20 லட்சம் வேண்டும்,...

திக் திக் நிமிடங்கள் - 3

"ஐயோ, என்ன இது அகில்? அந்த சடலம் எப்படி காணமல் போச்சு?" "தெரியவில்லையே! நம் வீட்டில் இதை போட்டவர்கள், நம்மை பின் தொடர்ந்து வந்து இருப்பார்கள் என நினைக்குறேன். அனால், நம் மேல் பழி விழ வேண்டும் என நினைத்தவர்கள் சடலத்தை நாம் புதைக்கும் முன் ஏன் எடுத்தார்கள் என்று தான் புரியவில்லை" "அப்போ இன்னும் அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் போல. நாம் சீக்கிரம் கிளம்பி விடலாம் டா" "பொறு, நீ இங்கே கார்-க்குள் பூட்டிக்கொண்டு இரு. நான் யாரவது தென்படுகிறார்களா என்று பார்த்து விட்டு வரேன்" "இல்லை ப்ளீஸ், எனக்கு இங்க இருந்து கிளம்பினால் போதும். அவர்கள் வேற ஏதும் ஆயுதம் வைத்து இருந்தால் நீ என்ன செய்ய முடியும்?" "ஹ்ம்ம், நீ சொல்வதும் சரி தான், வா கிளம்பலாம். எந்த வம்பிலும் மாட்டாமல் இருந்தால் சரி" என கூறியபடி கார்-ஐ ஸ்டார்ட் செய்தான். ஆனால் இனிமேல் தான் அவர்களுக்கு மேலும் பல அதிர்ச்சி காத்திருப்பது தெரிந்தால்?? மறுநாள் பொழுது எப்போதும் போல் இனிமையாக விடிந்தது. இருவரும் முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியையே பேசிக்கொண்டு இருந்தவர்கள், ரொம்ப நேரம் கழித்து தா...

திக் திக் நிமிடங்கள் - 2

இருவரையும் அந்த காட்சி முகத்தில் அடித்தது. அகில்-க்கு சர்வமும் அடங்கி போனது. அவனால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. மதி மயங்கி விழுந்தாள். அவள் விழும் சத்தம் கேட்டு தான் அகில் சுய நினைவுக்கு வந்தான். அவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டு தண்ணீர் தெளித்தான். லேசாக கண் விழித்தாள். "அ..அ...அகி..அகில்.." அவளுக்கு பேச்சே வரவில்லை. இதற்குள் அகில் முழுதும் சுதாரித்து இருந்தான். "பதட்டப்படாதே ப்ளீஸ் மா, எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக தான் இருக்கு. ஆனால் இப்போ நாம் நல்லா யோசிக்கணும். யாரோ நம் மேல் பழி விழ வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்திருகார்கள்." "ஐயோ, இப்போ என்ன பண்ணலாம்? எனக்கு ஒன்னுமே புரியலையே. யாரு இப்படி செஞ்சுருபாங்கனு தெரியலையே. போலிசுக்கு கால் பண்ணலாமா? " "இல்லை மா, கொஞ்சம் பொறு. யோசிச்சு நல்ல முடிவா எடுப்போம். முள் மேல் விழுந்த சேலை போல தான் செயல் படனும் டா." அந்த சடலத்தை நெருங்கி பார்த்தான். தலை முழுக்க இரத்தம். யாரோ ஏதோ ஆயுதத்தால் மண்டையில் அடித்து இருக்கார்கள். அதிகப்பட்சம் 30 வயது இருக்கலாம். நல்ல கருப்பு. அகில்-க்கு நன்றாக புரிந்தது. போல...

திக் திக் நிமிடங்கள் - 1

இன்றோடு அகில் மதிவதனி கல்யாணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. அவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. ஆகையால் திருமணத்துக்கு முன்னர் பேசி பழக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு சேர்த்து வைத்து திருமணத்துக்கு பின்னர் இருவரும் பத்து நாள் சுவிட்சர்லாந்த்-இல் திகட்ட திகட்ட தேன் நிலவு கொண்டாடினார்கள். அதன் பின்னரும் இந்த ஒரு வருடமும் நகமும் சதையும் போல தாம்பத்தியம் நடத்தினார்கள். மதி அவளின் அன்புக்கணவனிடம் கொஞ்சிக்கொண்டு இருக்கும் வேளையில் அவர்களை பற்றி ஒரு சின்ன அறிமுகம். அகில் அந்த காலத்து கமல் ஹாசனை நினைவுக்கூறும் தோற்றம் உடையவன். நல்ல உயரம். ஒரு மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனி-இல் ப்ராஜெக்ட் மேனேஜர். ஒரு பெண் தனக்கு வர வேண்டிய கணவனிடம் என்ன என்ன தகுதிகள் எதிர்பார்பாளோ, அது அனைத்தும் அவனுக்கு இருந்தது. மதி அவன் போட்டோ பார்த்து மயங்கியதில் ஆச்சர்யமே இல்லை. மதி மாநிறம். பெண்களில் அவள் நல்ல உயரம். உயரத்துக்கு ஏற்ற எடை. தெருவில் நடந்தால் ஒரு முறையானும் எவரும் அவளை திரும்பி பார்க்காமல் இருக்க மாட்டார். B.A இங்கிலீஷ் முடித்து இருக்கிறாள். "அகில், இன்னிக்கு ...

The Short Trip

"So...are you ready for your next trip?" "Ummm...yes, but I am scared. I am not sure whether I am ready for this" "Hmm...but you have already taken a long break. Its been almost a year since you returned. Dont you think it is time for another trip" "Yea, I agree. Can I have a look at the people where I will be going?" "Sure. See for yourself" "Umm...they look like pretty good people. So how much long will I have to stay there?" "Well, this is going to be a very short trip" "Oh no! But what will they do? Wont they feel bad if I return early?" "Yea, they will. But it was totally my fault. I have been arranging such trips for a very long time, and at times I commit such irreversible mistakes. But do not worry. Once you come back, I will send some one else who will stay there for long. So...are you set?" "Yes, I am ready!!" After a few hours, "Congrats Ragav! Your wife just delived a so...

மறுபிறவி

யசோதா அழுது அழுது கண் இரண்டும் உப்பி இருந்தது. சிறிது நேரத்துக்கு எல்லாம் கண்ணீர் வற்றி சுய பட்சாபம் தோன்றி அவளை வாட்டியது. எனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி ஒரு அம்மாவை தந்தார். எப்போது பார்த்தாலும் என்னை குறை கூறுவதே அம்மாவுக்கு வேலையாய் போய் விட்டது. குனியாதே! நிமிரதே! சத்தம் போடாதே! எதிர்த்து பேசாதே! என்று எப்போதும் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள். சை! நன் பிறந்திருக்கவே கூடாது. பிறந்தது தான் பிறந்தேன், வசந்தியின் வீட்டில் பிறந்து இருக்கலாம் அல்லவா.  அவள் அம்மா தான் எவ்வளவு நல்லவர்கள். என்னிடம் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். என்னை ஒரு வாட்டியும் அதட்டியதே இல்லை.  இங்கே வந்து பிறந்து இப்படி மாட்டி கொண்டேனே. மறுபடியும் அவளுக்கு கண்ணீர் பொங்கியது. அடக்கி கொண்டாள். கூடாது. கூடவே கூடாது. அழுது ஒன்றும் ஆகப் போவது இல்லை. இந்த அம்மாவுக்கு நல்ல பாடம் ஒன்று புகட்ட வேண்டும். அப்போது தன் என் அருமை புரிந்து கொள்வாள். என்ன செய்யலாம்? சட்டென்று மின்னல் வெட்டியது போல் அந்த எண்ணம் தோன்றியது. வீட்டை விட்டு போய் விட்டால் என்ன? அம்மா என்னை நினைத்து தவியாய் தவிப்பார்கள். தவிக்கட்டும்....